இந்திய வம்சாவளி சிங்கப்பூரரை காணவில்லை – எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்து விழுந்ததாக தகவல்

Indian-origin Singaporean -missing-near-mount-everest-peak
Pexels

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு ஏறிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரரை காணவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த பின்னர் அவர் காணாமல் போனதாகவும், அவரது நிலை குறித்து அவசரமாக கவனிக்குமாறு அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

change.org என்ற இணையதளத்தின் படி, ஸ்ரீனிவாஸ் சைனிஸ் தத்தாராயா என்ற அவர் கடந்த மாதம் சிங்கப்பூரில் இருந்து நேபாளத்திற்கு சென்றார் என கூறப்பட்டுள்ளது.

கீழே இறங்கும் வழியில், அவர் உறைபனி மற்றும் நோயால் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது என்று அவரது உறவினர்கள் கூறினர்.

இதனால் அவர் தனது குழுவில் இருந்து பிரிந்து சுமார் 8,000 மீட்டர் உயரத்தில் இருந்து, மலையின் திபெத்தியப் பகுதியில் விழுந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார் அவர்.

அதாவது 8,000 மீட்டர் உயரத்தில் இருந்தபோது அவர் முகாம் குழுவுடன் தொடர்பில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், அவரை தேடும் பணிகள் நேற்று முதல் தொடங்கியதாக சொல்லப்பட்டுள்ளது.