தாய் வீட்டில் இல்லாத போது குடிபோதையில் படுத்துக்கிடந்த தந்தையை சுத்தியலால் தாக்கிய மகள்… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் கைது!

JUDGEMENT

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், அவளது தந்தையை பலமுறை சுத்தியலால் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்துள்ள தகவல்களின்படி, 53 வயதான தந்தை வீட்டில் மது அருந்துவதை பழக்கமாகக் கொண்டுள்ளார். அதனை நிறுத்துமாறு மகள் பலமுறை கண்டித்தும் அலட்சியப்படுத்தியதற்காக தந்தையை சுத்தியலால் தாக்கியுள்ளார். அத்துடன் பெண்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் ஜனவரி 6, 2020 அன்று நடந்துள்ளது. ஷிவதர்ஷினி தனது தந்தை குடித்துவிட்டு வீட்டில் படுத்துக் கிடந்ததைக் கண்டு கொதித்துள்ளார். தாய் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவரது சகோதரி தனது அறையில் தூங்கிக் கொண்டுள்ளார். அப்போது சமையலறைக்குச் சென்ற ஷிவதர்ஷினி சுத்தியலோடு வந்துள்ளார். அங்கு மது போதையில் படுத்திக் கிடந்த தந்தையின் தலையில் மூன்று நான்கு முறை தாக்கியுள்ளார்.

அத்துடன் தந்தையின் தலையில் ரத்தம் வடிந்த போது, காவல்துறைக்கு ஷிவதர்ஷினி அழைப்பு விடுத்து தான் தனது தந்தையை சுத்தியலால் தாக்கிய விவரத்தை தெரிவித்துள்ளார். எனவே, உடனடியாக காவல்துறையால் ஷிவதர்ஷினி கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி தண்டனைக்காக ஷிவதர்ஷினி ஆஜராவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 5,000 சிங்கப்பூர் டாலர்கள் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.