இளைஞர்களே உஷார்! – மேட்ரிமோனியில் இளம்பெண் போல் சுயவிவரத்தை வெளியிட்டு மோசடி செய்த 51 வயது பெண்

marriage-of-convenience-related offences foreigners
(Photo: India filings)

“கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் ” அப்படின்னு பெரியவங்க சொல்லுவாங்க. தனக்கு இணையான துணையை இணையதளம் மூலமா தேடினால் எப்படி எல்லாம் பிரச்சனை வருமென்று இந்தச் செய்தியை முழுமையா படிக்கிறவங்களுக்கு தெரியும்.

51 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலிஹா ராமு என்ற பெண் மேட்ச் மேக்கிங் என்ற மேட்ரிமோனி இணையதளத்தில் போலியான சுயவிவரத்தை வெளியிட்டு இந்திய ஆணையும் அவரது தந்தையையும் ஏமாற்றி பணம் பறித்த குற்றத்திற்காக சிங்கப்பூர் நீதிமன்றம் 7 மாத சிறை தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது.

மலிஹா தன்னை, கீர்த்தனா என்ற 25 வயது இளம்பெண்ணாக மேட்ரிமோனியல் சுயவிவரத்தில் போலியாக பதிவேற்றியுள்ளார். தனது உறவினர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி வெளிநாட்டில் ராணுவ தளத்தில் பணிபுரிந்ததாகவும் கேமரா போன்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறி வீடியோ அழைப்புகளை தவிர்த்துள்ளார்.

நவம்பர் 2018-ல், தனது இருபத்தி ஒன்பது வயது மகனுக்கு ஏற்ற துணையைக் கண்டுபிடிப்பதற்காக மேட்ச் மேக்கிங் இணையதளத்தில் தந்தை கோவிந்தன் தனசேகரன் முரளி கிருஷ்ணா ,ஒரு கணக்கை தொடங்கி அதில் தனது மகனின் சுயவிவரத்தை பதிவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் தந்தை இணையதளம் மூலம் அவளைத் தொடர்பு கொண்டபோது கீர்த்தனா போல் பேசி ,வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மூலம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள்.சிங்கப்பூர் ஆயுதப் படையில் பணிபுரியும் தனது 27 வயது மருமகளின் புகைப்படத்தை அனுப்பி கீர்த்தனா இவ்வாறு தான் இருப்பார் என்று அவர்களை நம்ப வைத்துள்ளார்.

மணமகன் மற்றும் அவரது தந்தை பலமுறை திருமணத்தைப் பற்றி விவாதம் செய்ய செய்தபோது, போலியான குடும்ப காரணங்களை கூறி திருமணத்தை தள்ளிப் போட்டிருக்கிறார். மேலும் தனது சமூகப் பணிகளுக்கு நிதி தேவைப்படுவதாக கூறிய மலிஹா,SG$5000-க்கும் மேற்பட்ட தொகையை அவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.

மலிஹா, ஏற்கனவே இதுபோன்ற மேட்ரிமோனி மோசடியின் மூலமாக S$2,25,000 பெற்றுள்ளார். செவ்வாயன்று, தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட மலிஹாவுக்கு சிறை தண்டனையும் அபராதமும் சிங்கப்பூர் நீதிமன்றம் விதித்தது.