சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தியர்கள் மகிழ்ச்சி! – வெள்ளிக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!

Singapore Shell companies linked money laundering operation India

சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு அண்மைக்காலமாக சரிந்து வருகிறது.வியாழக்கிழமை ( டிச 15) அன்று ஒரு வெள்ளிக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.2 ஆக இருந்தது.

ஒரு வெள்ளிக்கு 60 ரூபாய் என்ற அளவை இதுவரை இந்திய நாணயம் எட்டியதில்லை.இந்தாண்டு முழுவதும் இந்திய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.

வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் அமெரிக்காவின் மத்திய வங்கி, ரஷ்யா-உக்ரைன் மோதல் காரணமாக உயர்ந்த பணவீக்கம், பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றினால் ரூபாயின் மதிப்பு பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கு வரும் இந்தியப் பயணிகள் ரூபாயைக் கொடுத்து வெள்ளியாக மாற்றும்போது குறைவான சிங்கப்பூர் நாணயமே கிடைக்கிறது.அதேசமயம், வெள்ளி மதிப்பு கூடியிருப்பதால், இந்தியாவுக்குச் செல்பவர்கள் சிலர் மகிழ்ச்சி அடைவார்கள்.