சிங்கப்பூரில் எகிறும் இந்திய பயணிகளின் வருகை – “சிங்கப்பூரை தாய்நாடு போல கருதும் இந்தியர்கள்”

indian-tourist-arrivals-surge-singapore
(PHOTO: Singapore Tourism Board)

சிங்கப்பூரில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

சர்வதேச ஹோட்டல்கள் மற்றும் உலகளாவிய தரம்வாய்ந்த விற்பனை நிலையங்களுக்கான மையமான ஆர்ச்சர்ட் சாலை இருந்து வருகிறது.

செல்லுபடியாகும் விசா இல்லாமல் வந்த வெளிநாட்டவர் – அதிகாரிகளிடம் தந்திரத்தை காட்ட முயன்று சிக்கியருக்கு சிறை

இந்நிலையில், 6 வார கால பண்டிகை நாட்களை கருத்தில்கொண்டு சுமார் 5 முதல் 6 மில்லியன் வரை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வரவை சிங்கப்பூர் எதிர்பார்க்கிறது.

தொற்றுநோய் காலகட்டத்துக்கு பிறகு சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில், இந்தியர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக ஆர்ச்சர்ட் ரோடு வணிக சங்கத்தின் தலைவர் மார்க் ஷா கூறுகிறார்.

உண்மையில், இந்த ஆண்டு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகப்பெரிய அளவில் இருந்ததாக திரு.ஷா PTI இடம் கூறினார்.

இந்திய பயணிகள், பல புதிய இடங்களை கண்டு மகிழ சிங்கப்பூருக்கு வருகிறார்கள், ஆனால் சிங்கப்பூரில் இருக்கும் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் தொடர்பை பார்த்து இதை நம் தாய்நாடாக அவர்கள் எண்ணுவதாக அவர் கூறினார்.

கடந்த ஆண்டு அதே காலகத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியப் சுற்றுலா பயணிகளில் வருகை 15.5 சதவீதம் அதிகரித்து 792,935 ஆக இருந்ததாக அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மெரினா பே சாண்ட்ஸின் நுழைவாயிலில் மலம் கழித்த நபர் – யார் அவர்?