இந்திய ஊழியருக்கு சிறைத் தண்டனை – வாகனத்தில் தூங்கியதால் நேர்ந்த கொடூரம்

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

வாகனத்தில் தூங்கி விபத்தை ஏற்படுத்திய இந்திய ஊழியருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சௌரிராஜுலு கருணாகரன் என்ற அவர் குடிபோதையில் சிமென்ட் கலவை வாகனம் ஓட்டும்போது தூங்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

அப்போது பல வாகனங்கள் சம்மந்தப்பட்ட விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இடுப்பு எலும்பு முறிவு ஒருவருக்கு ஏற்பட்டது உட்பட பலர் காயமடைந்தனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தை 45 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சௌரிராஜுலு ஒப்புக்கொண்டார்.

அதன் பிறகு, அவருக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் கவனம் இல்லாமல் வாகனம் ஓட்டி கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக கூடுதலாக 10 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும் விடுதலையான பிறகு 14 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கும் அவருக்கு தடை விதிக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

இன்ஃபினைட் லாஜிஸ்டிக்ஸ் அண்ட் டிரேடிங்கில் நிறுவனத்தில் சௌரிராஜுலு பணிபுரிந்தார். கடந்த ஆண்டு மே மாதம் இந்த சம்பவம் நடந்தது.