இந்திய ஊழியர் மரணம்! – கொலையா? விபத்தா? தீவிர விசாரணையில் அதிகாரிகள்!

SCDF responders rescue injured worker from 40m-high crane
(Screengrabs: Facebook/SCDF)

தெங்கா கண்டோமினிய கட்டுமானத் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர் விபத்தில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.இரும்புக் கம்பிகளை வாகனத்தில் இருந்து இறக்கும்போது முன்னெச்சரிக்கையின்றி கவனக்குறைவாக நடந்து கொண்டதாக சந்தேகத்தின்பேரில் 45 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் இந்தாண்டின் பணியிட மரணங்களின் எண்ணிக்கையை 44 ஆக உயர்த்தியுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4:35 மணிக்கு விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் காவல்துறை தெரிவித்தது.

கனரக வாகனத்தில் இருந்து இரும்புக் கம்பிகளை இறக்கும்போது இந்தியத் தொழிலாளர் மீது பாரந்தூக்கியின் ஒரு பகுதி கழன்று விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.கைதுசெய்யப்பட்ட நபரிடம் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில் ஹோஹப் கட்டுமான நிறுவனத்தில் பாரந்தூக்கிகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.கனமான பொருள்களைக் கையாளும்போது ஊழியர்கள் அதற்க்குக் கீழே நிற்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சகம் கேட்டுக் கொண்டது.