வேலையின்போது உயிரிழந்த இந்திய ஊழியர் – அஜாக்கிரதையாக செயல்பட்ட நிறுவனத்துக்கு S$250,000 அபராதம்

jail-caning-worker-sex-assaulted-maid
Roslan Rahman/AFP

சிங்கப்பூரில் வேலையின்போது உயிரிழந்த இந்திய ஊழியரின் விபத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட நிறுவனம் மற்றும் அதன் இயக்குநருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கட்டுமான ஊழியரான அப்போது 22 வயது இருந்த திரு கலியபெருமாள் மணிகண்டன் என்ற தமிழ்நாட்டு ஊழியர் இதில் உயிரிழந்தார்.

அதாவது சுமார் 8 மீட்டர் உயரத்தில் உள்ள லிப்ட் தளத்தில் அவர் மின்சாரம் சம்மந்தப்பட்ட வேலை செய்து கொண்டிருந்தபோது லிப்ட்டில் கிரேன் மோதியதில் லிப்ட் கவிழ்ந்து திரு கலியபெருமாள் கீழே விழுந்து இறந்தார்.

Fusion Builders என்ற நிறுவனத்தின் இயக்குநரான இங் சின் சங், கிரேன் ஊழியர்கள் முறையான பயிற்சி பெறாமலே வேலை செய்ததை கண்டும் காணாமல் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

வேலையிடத்தில் லாரி மோதி கொடூர விபத்து – ஊழியர் சிகிச்சை பலனின்றி மரணம்

அவர்களின் பயிற்சி நிலையை பொருட்படுத்தாமல் சுதந்திரமாக கிரேனைப் பயன்படுத்த விட்டதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், 72 வயதான சிங்கப்பூரர் இங், வேலையிட பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து S$60,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவரது நிறுவனத்திற்கு S$250,000 அபராதம் விதிக்கப்பட்டது.

22 Tuas Avenue 6 இல் உள்ள நான்கு-அடுக்கு தொழிற்சாலை கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் Fusion Builders நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அங்கு தான் திரு கலியபெருமாள் வேலை செய்துள்ளார்.

குப்பைகளை முதல் தளத்திற்கு மாற்றும் பணிகளை கிரேன் மேற்கொண்டபோது, திரு கலியபெருமாள் நின்றுகொண்டு வேலை செய்த சிசர் லிப்ட் தளத்தில் கிரேன் மோதி லிப்ட் கீழே கவிழ்ந்து அவர் உயிரிழந்தார்.

சிங்கப்பூரில் அனைத்து COVID-19 தடுப்பூசி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளது – அக்.10 முதல் அமல்