இந்திய ஊழியர் வாகனம் மோதி மரணம் – வேலையிடத்தில் நடந்த சோகம்

indian worker-dies-hit-by-reversing-vehicle-jurong-west-worksite

ஜூரோங் வெஸ்டில் உள்ள வேலையிடத்தில் பின்னால் வந்த வாகனம் மோதியதில் 33 வயதான இந்திய ஊழியர் உயிரிழந்தார்.

அந்த ஊழியர் தாம் ஓட்டும் டிப்பர் லாரியில் இருந்து பொருட்களை இறக்குவதற்கு ஆயத்தம் ஆகிகொண்டிருந்தார்.

அப்போது ​​கட்டுமானத் தளங்களில் பொருட்களைத் ஏற்ற / இறக்க பயன்படும் வீல் லோடர் வாகனம் பின்பக்கமாக வந்து மோதியதாக மனிதவள அமைச்சகம் (MOM) இன்று கூறியுள்ளது.

சிங்கப்பூரின் 58வது தேசிய தினம்: களைகட்ட போகும் கொண்டாட்டங்கள்… 5 முக்கிய இடங்கள் – விளையாட்டும் உண்டு

இந்தச் சம்பவம் கடந்த திங்கள்கிழமை மதியம் 3.40 மணியளவில் 1 புரோ க்ளோஸில் நடந்ததாகவும், இது குறித்து விசாரித்து வருவதாகவும் MOM கூறியுள்ளது.

அவர் BSN Tech Engineering நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்தார் என்பது கூடுதல் தகவல்.

மேலும் அவர் ஸ்டார் ரெடி-மிக்ஸ் நிறுவனத்தின் வேலையிடத்தில் பணிபுரிந்து வந்தார்.

மேலும் அங்கு அனைத்து வாகன செயல்பாடுகளையும் நிறுத்துமாறு ஸ்டார் ரெடி-மிக்ஸ் நிறுவனத்திற்கு MOM அறிவுறுத்தியுள்ளது.

இறந்தவர் குறித்த தகவலை கேட்டுவருகிறோம். விரைவில் முழு விவரம் பதிவு செய்யப்படும்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

லிட்டில் இந்தியாவில் போலீசிடம் வம்பு, ஆயுதத் தாக்கில் பங்கு.. குற்றத்தை ஒப்புக்கொண்ட ஊழியர்