“இந்தியாவுக்கு திரும்பி போ” – 10 வருடங்களாக சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியரை கொச்சைப்படுத்திய டாக்ஸி ஓட்டுநர்

indian worker grab-investigating-driver
Unsplash & sgfollowsall/Instagram.

சிங்கப்பூரின் வாடகை டாக்ஸி செயலியில் வாடிக்கையாளர் மற்றும் ஓட்டுநர் இடையே ஏற்பட்ட மெசேஜ் வழி வாய் தகராறு பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.

இதில் வாடிக்கையாளருக்கு இனவெறிக் கருத்துக்களை அனுப்பிய சம்பவம் குறித்து Grab நிறுவனம் விசாரித்து வருவதாக கூறியுள்ளது.

அசால்ட்டாக வளம் வந்த “கருநாகப்பாம்பு” – சிங்கப்பூரில் அதிகம் காணப்படாத காட்சி

பெயர் குறிப்பிடாத அந்த வாடிக்கையாளர், இந்த சம்பவம் தொடர்புடைய உரையாடல் அடங்கிய ஸ்கிரீன் ஷாட்களை “sgfollowsall” இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக, அந்த வாடிக்கையாளர் 10 வருடங்களாக சிங்கப்பூரில் பணிபுரிவதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் உள்ள உரையாடலின்படி, வாடிக்கையாளர் கிராப் டாக்ஸியை முன்பதிவு செய்ததாக கூறப்படுகிறது, ஆனால் தனது இருப்பிடத்திற்கு ஓட்டுநர் வர மறுத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வெளியே சாலைப்பணிகள்” நடப்பதாக கூறிய ஓட்டுநர், உள்ளே வர முடியாது என்றும் கூறியுள்ளார்.

அதனை ஏற்றுக்கொண்ட வாடிக்கையாளர் டாக்ஸிக்காக காத்திருக்க முன்வந்த போதிலும், ஓட்டுநர் தன்னால் பிக்கப் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஆனால் ஓட்டுநர் தனது புறத்தில் இருந்து பயணத்தை ரத்து செய்யவில்லை.

இதனை அடுத்து பயணத்தை நீங்கள் ரத்து செய்யவில்லை என்று வாடிக்கையாளர் சொன்னதற்கு, ​​”நீ(ங்க) இந்தியன்” என்று சம்மந்தமில்லாத குறுஞ்செய்தியை ஓட்டுநர் அனுப்பியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், “இந்தியாவுக்கு திரும்பி போ(ங்க)” என்றும் இன ரீதியாக கொச்சைப்படுத்தி பேசியுள்ளார் அந்த ஓட்டுநர்.

“இது முற்றிலும் அப்பட்டமான இனவெறி,” என்று வாடிக்கையாளர் கருத்து தெரிவித்தார்.

எனினும் இந்த ஒரு சம்பவம் சிங்கப்பூரில் எனக்குள்ள அன்பான அனுபவத்தை மாற்றாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியரை இன ரீதியாக கொச்சைப்படுத்தி, எட்டி உதைத்த சிங்கப்பூர் ஆடவருக்கு சிறை

இந்தியப் பெண்ணை மார்பில் எட்டி உதைத்து, இன ரீதியாக கொச்சைப்படுத்திய சிங்கப்பூர் நபர்

வெளிநாட்டவரை “நாய்”..”உன் நாட்டுக்கு போ” என்று இன ரீதியாக தாக்கிய ஆடவர் இறந்த நிலையில் கண்டெடுப்பு

உலகிலேயே மிக பரபரப்பான விமான நிலையம் துபாய்.. 5 வது இடத்தில் சாங்கி விமான நிலையம்