பார்வைத்திறன் குறைபாடுடைய முதியவருக்கு உதவிய தமிழக ஊழியர் – குவியும் பாராட்டு

(Photo: Singapore ministry of man power fb page)

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன் மணிகண்டன் என்பவர் நில ஆய்வு உதவியாளராக சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, அவர் அங் மோ கியோ அவென்யூ 6ல் பணியாற்றிக்கொண்டு இருந்தார். அச்சமயம் பார்வை திறன் குறைபாடு உள்ள முதியவர் சாலையை கடக்க நீண்ட நேரம் முயற்சி செய்வதை குணசேகரன் கவனித்தார்.

கோல்ஃப் பந்து தாக்கி வாடிக்கையாளர் காயம் – சோதனைப் பகுதி மூடல்

அந்த முதியவர் மருத்துவரை காண வேண்டும் என கூறியதாகவும், உடனே அவரை அருகில் உள்ள பலதுறை மருந்தகத்திற்கு அழைத்து சென்றதாகவும் குணசேகரன் கூறினார்.

அவர் மேற்கொண்ட இந்த மனிதநேயம் மிக்க செயல் காணொளியாக பதிவிடப்பட்டு பாராட்டுகளை பெறும் என அவரும் எதிர்பார்க்கவில்லை என கூறினார்.

பொது மக்களில் ஒருவர் இந்த செயலை காணொளியாக பதிவிட்டு Roads.sg என்ற முகநூல் பக்கத்தில் பதிவிறக்கம் செய்திருந்தார். அக்காணொளியை 280,000க்கு அதிகமானோர் பார்வை இட்டதாக தெரியவந்துள்ளது.

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் அவர்களின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாவது, அவர்களின் ACE (நம்பிக்கை, பராமரிப்பு மேற்கொள்ளும் துறை) பிரிவை சேர்ந்த அதிகாரிகள், குணசேகரனின் இருப்பிடத்தை அந்த காணொளிவாயிலாக அறிந்து, பின் அவரை சந்தித்து பாராட்டி, சின்ன அன்பளிப்பு வழங்கியதாக ஒரு புகைப்படத்தை பதிவிற்றிருந்தது.

சென்ற வருடம் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் ஒரு பிரிவாக தொடங்கப்பட்ட எசிஇ, இது போன்ற செயலில் ஈடுபடும் வெளிநாட்டு ஊழியர்களை பாராட்டி பரிசு வழங்கி வருகிறது.

குணசேகரன் அந்த பரிசை தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவும், இந்த நிகழ்வை நினைத்து என் குடும்பத்தார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் எனவும் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து கொண்டே இருப்பேன் என நெகிழ்ச்சியாக கூறிருந்தார்.

காவல்துறை வேன், லாரி மோதி விபத்து – 5 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 11 லாரி பயணிகளுக்கு காயம்