லாரியில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர்.. முதலாளி இழப்பீடு வழங்க வேண்டும் – தீர்ப்பு

migrant workers little india bus service extended
(Photo: Today)

இந்திய ஊழியர் ஒருவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு அவரது முதலாளியிடமிருந்து இழப்பீடு பெற உரிமை உண்டு என்று மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லாரியில் இருந்து இறங்கும் போது தள்ளப்பட்டதால் ஊழியர் கீழே விழுந்து முழங்காலில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் சிறுயை நாசம் செய்ததாக சிக்கிய மதுக்கடை உரிமையாளர்

கப்பல் பழுதுபார்க்கும் வேலை பார்த்துவந்த இந்திய நாட்டவரான ராமலிங்கம் முருகன் (37), 2021 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு இழப்பீடு கோரி தனது நிறுவனம் “ரிகல் மரைன் சர்வீசஸ்” மீது வழக்கு தொடர்ந்தார்.

ஆகஸ்ட் 7, 2023 தேதியிட்ட தீர்ப்பில், லாரியின் டெக்கில் தொழிலாளி ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஒரு பாதுகாப்பான அமைப்பை ஏற்படுத்தத் தவறியதன் மூலம், நிறுவனம் முருகனுக்கு பாதுகாப்பு வழங்கும் கடமையை மீறியதாக மாவட்ட நீதிபதி டான் மே டீ கூறினார்.

இதற்கான இழப்பீட்டு தொகையின் மதிப்பு தனியாக மதிப்பிடப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

திரு முருகன், கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் எஃகு கட்டுமானம் மற்றும் பெயின்டராக பணிபுரிந்தார்.

2021 ஜனவரி 3 அன்று, அவர் தனது தங்கும் விடுதியிலிருந்து பூன் லேயில் உள்ள நிறுவனத்துக்கு 24 ஊழியர்களுடன் லாரியில் சென்றார். அங்கிருந்து, அவர் நியமிக்கப்பட்ட பணியிடத்திற்கு செல்ல மற்றொரு லாரியில் சென்றுள்ளார்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், லாரியில் ஊழியர்களை மாற்றும் பணி விறுவிறுப்பாக நடந்தது.

திரு முருகன், லாரியில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த போது, ​​மற்ற ஊழியர்களால் தள்ளப்பட்டதால், அவர் சமநிலை இழந்து கீழே விழுந்தார்.

அதன் பின்னர், அவர் Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு முழங்கால் மூட்டு மற்றும் குருத்தெலும்பு உடைந்ததாக கண்டறியப்பட்டது.

பின்னர் அவருக்கு அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2021 ஜனவரி 3 முதல் ஜூன் 2 வரை அவர் மருத்துவ விடுப்பில் இருந்தார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“பாஸ்போர்ட், ஒர்க் பெர்மிட்டை காட்டு” – பணிப்பெண்ணை நாசம் செய்த வெளிநாட்டு ஊழியருக்கு 18 ஆண்டு தடுப்பு காவல், 12 பிரம்படி