இரு இந்திய ஊழியர்களை காணவில்லை – “முழுசா அலசிட்டோம், யாரும் இல்லை” – கைவிரிக்கும் அதிகாரிகள்

tanker fire
Photo: The Star

சிங்கப்பூர் வந்து கொண்டிருந்த டேங்கர் கப்பலில் இந்த வார தொடக்கத்தில் தீப்பிடித்ததாக நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

அதில் மூன்று ஊழியர்கள் காணவில்லை என்றும் நாம் சொன்னோம். அவர்களை தேடும் பணியும் துரிதமாக நடந்து வந்தது.

இந்நிலையில், அடுத்த கட்ட தடயம் கிடைக்கும் வரையில் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் இருவர் இந்திய ஊழியர், ஒருவர் உக்ரைன் ஊழியர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

“கப்பலில் முழுமையாக தேடி அலசிவிட்டோம், அவர்கள் கப்பலில் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை” என்று ஜோகூர் கடற்துறை சார்ந்த இயக்குனர் அட்மிரல் நூருல் ஹிஷாம் கூறியுள்ளார்.

காணாமல் போன மூவரும் இந்தோனேசிய பகுதிக்கு அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் இருப்பதாகவும், அது குறித்து அந்நாட்டுக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

டேங்கர் கப்பலில் கடும் தீ விபத்து: 3 ஊழியர்களை காணவில்லை – தேடும் பணி தீவிரம்