சிங்கப்பூரில் சீனாவை விஞ்சிய இந்தியர்கள் – எல்லா நாடுகளையும் பின்னுக்கு தள்ளி பதிக்கப்பட்ட முத்திரை!

job vacancies at changi airport

வழக்கமாக சிங்கப்பூருக்கு அதிகம் சுற்றுலா பயணிகள் சீனாவில் இருந்து தான் வருவார்கள்.

ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக சீனாவில் கொரோனாவின் ஓமிக்ரான் திரிபு பாதிப்பு பரவல் காரணமாக முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் காரணமாக சீனாவின் பங்களிப்பு தற்போது இல்லை. இதை சரிக்கட்டும் விதமாக இந்தியா சுற்றுலா பயணிகள் சிங்கப்பூர் சுற்றுலாத்துறைக்கு உதவிக்கரம் நீட்டி அச்சரியப்படுத்தியுள்ளனர்.

சிங்கப்பூரில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும் பாதிப்பை கண்ட துறைகளில் பிரதானமானது சுற்றுலாத் துறை.

லாக்டவுன் அறிவிப்பு காரணமாக மக்களின் அன்றாட போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலாத்துறை முற்றிலும் அடிவாங்கியது.

உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால், 2 ஆண்டுகள் சுற்றுலாத்துறை முடங்கியதால் இலங்கை பெரும் பொருளாதார வீழ்ச்சி கண்டு அதில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் சுற்றுலாவை சார்ந்துள்ள நாடான சிங்கப்பூர் மீண்டும் புத்துணர்ச்சியை கண்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் தனது பொலிவை பெற்றுவருகிறது. இதற்கு இந்தியாவின் பங்களிப்பே அதிகம் என புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் சென்றுள்ள சுற்றுலா பயணிகளில் இந்தியர்களே முதலிடம் பெற்றுள்ளனர். ஜனவரி முதல் ஏப்ரல் காலகட்டத்தில் 95 ஆயிரம் இந்தியர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்தனர்.

அடுத்தபடியாக 89,700 இந்தோனேசியர்களும், 45,600 மலேசியர்களும் சிங்கப்பூர் சுற்றுலா வந்தனர்.