வெளிநாட்டிற்கு சென்றால் இவ்ளோ சம்பளம் கிடைக்கும் ! – தாய்நாடு இந்தியாவிற்கு பணப்பரிவர்த்தனை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள்!

Singapore Shell companies linked money laundering operation India

இந்தியத் திறனாளர்கள் பலரும் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்து ஈட்டும் பணத்தை தாய்நாட்டில் இருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.அவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய ஊழியர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான தொகையை தாயகத்திற்கு அனுப்புவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவிற்கான பணப் பரிவர்த்தனை விகித நூறு பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உலகிலேயே அதிக பரிவர்த்தனைத் தொகையைப் பெறும் நாடு என்ற சிறப்பு இந்தியாவைச் சேரும்.

அமெரிக்கா,சிங்கப்பூர்,பிரிட்டன் போன்ற பணக்கார நாடுகளில் அதிகளவில் பணிபுரியும் மெக்சிகோ,சீனா,பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தாயகத்திற்கு அனுப்பும் பரிவர்த்தனைத் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.இந்திய ரூபாய் சரிந்திருப்பதும் பணப் பரிவர்த்தனை அதிகரித்திருப்பதற்கு காரணம் ஆகும்.

குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களாக வேலைபார்ப்பதைக் கைவிட்டு,தொழில்நுட்பம் போன்ற அறிவுசார்ந்த துறைகளில் திறனாளர்களாக வேலைக்குச் செல்லும் இந்திய ஊழியர்கள் பெறும் ஊதியம் அதிகமானதால் கூடுதல் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

இவையும் முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றன.இந்தியாவின் பொருளாதாரப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு இந்தத் தொகை முக்கியப் பங்காற்றும் என்று கூறப்படுகிறது.