லிட்டில் இந்தியாவில் புல்வெளியில் தவித்த இந்தியர்கள் – விசிட்டிங் வந்தவர்கள் அவதி

liquor-rules-amendment jan.2 2024

லிட்டில் இந்தியாவில் விசிட்டிங் வந்த இந்திய பயணிகள் சிக்கி தவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த பயணிகள் சிலர் தங்குவதற்கு இடம் இன்று தவித்ததாக சொல்லப்படுகிறது.

“வேலையில் பிரஷர் தாங்கல..” – தப்பித்து காட்டுக்குள் சென்று 6 நாள் வாழ்ந்த வெளிநாட்டு ஊழியர்: பசி எடுத்ததும் அவசர எண்ணை அழைத்த சோகம்

அதன் காரணமாக அவர்கள் லிட்டில் இந்தியாவின் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள புல்வெளியில் லக்கேஜ் மற்றும் குழந்தைகளுடன் காத்திருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மதிய உணவு சாப்பிட்டு விட்டு அவர்கள் அங்கு சென்று காத்திருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

சுமார் 100 பேர் முன்பதிவு செய்தும் ஹோட்டல் அறைகள் கிடைக்காமல் தவித்துள்ளனர்.

பீச் ரோட்டில் உள்ள டிராவல்டைன் ஹோட்டலில் முன்பதிவு செய்த அவர்கள் சுமார் 3 மணிநேரம் அறைகள் ஒதுக்கப்படாமல் அவதிப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அவர்கள் முன்பணம் செலுத்தவில்லை என்றும், ஹோட்டல் விதிகளின்படி கண்டிப்பாக முன்பணம் செலுத்தினால் மட்டுமே அறைகள் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: அதிக அளவில் ஊழியர்களை வேலைக்கு எடுக்க பேருந்து நிறுவனங்களுக்கு அனுமதி