இண்டிகோ விமான என்ஜினில் தீ…. அவசர அவசரமாக பயணிகள் வெளியேற்றம்!

Video Crop Image

டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் என்ஜினில் தீப்பற்றியதால் உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

நியூ அப்பர் சாங்கி சாலையில் ஒருவரை ஆயுதத்தால் தாக்கிய சந்தேகத்தில் ஆடவர் கைது

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு (Indigo Airlines) சொந்தமான ‘6E 2131’ என்ற விமானம், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று (28/10/2022) இரவு 10.00 மணியளவில் 184 பேருடன் பெங்களூருவுக்கு புறப்பட்டது. விமானம் ஓடுதளத்தில் ஓடிக் கொண்டிருக்கையிலேயே, அதன் ஒரு என்ஜினில் தீப்பற்றியது. இதையடுத்து, விமானி விமானத்தை உடனடியாக நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக, பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானம் புறப்பட்ட போது, விமானத்தின் ஒரு என்ஜின் செயல் இழந்துவிட்டதாகவும், உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பயணிகளும் மாற்று விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

பழைய நிலைக்கு மாறும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் – டாப் ஐந்தில் இந்தியர்கள்

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படி, விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, இண்டிகோ விமானத்திற்கு பின்னாள் வரிசையில் காத்திருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் விமானியே தீப்பொறிகளைக் கண்டு விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.