நடுவானில் விமானத்தில் மதுபோதையில் இருந்த பயணி செய்த காரியம்… அலறிய சக பயணிகள்!

Photo: Indigo Airlines

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு (Indigo Airlines) சொந்தமான 6E 308 என்ற விமானம், டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு 100- க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த நிலையில், மதுபோதையில் இருந்த 40 வயதுடைய பயணி ஒருவர், கழிவறைக்குள் சென்றுள்ளார்.

இந்திய ஊழியருக்கு சிறைத் தண்டனை – வாகனத்தில் தூங்கியதால் நேர்ந்த கொடூரம்

பின்னர், அந்த பயணி விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க முயன்றுள்ளார். இதனால் விமானத்தில் இருந்த சக பயணிகள் அலறினர். இதைக் கண்ட விமான பணிப்பெண்கள் அந்த பயணியை எச்சரித்து, இருக்கையில் அமர வேண்டும் என்று அறிவுறுத்தினர். இந்த நிலையில், விமானம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அதைத் தொடர்ந்து, அந்த பயணி சிஐஎஸ்எஃப் துணை ராணுவப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது.

படிக்கட்டுகளில் இருந்து தள்ளிவிடப்பட்ட இந்திய வம்சாவளி மரணம்!

தற்போது, விமானத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சம்மந்தப்பட்டப் பயணிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், இதுபோன்ற தவறுகள் நடைபெறுவது குறையும் என்று பயணிகள் விமான போக்குவரத்துத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்..