விமானத்தில் பயணி- விமான பணிப்பெண் இடையே கடும் வாக்குவாதம்! (வைரலாகும் வீடியோ)

Viral video crop image

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines). இந்த விமான நிறுவனம், இந்தியாவில் அதிகளவில் உள்நாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது. அதேபோல், இந்தியாவில் சென்னை, திருச்சி, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், அமிர்தசரஸ், கொச்சி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா, துருக்கி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தொடர்ந்து விமான சேவைகளை வழங்கி வருகிறது.

S Pass அல்லது work permit ஊழியர்களை அதிக அளவில் வேலைக்கு எடுக்க சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அனுமதி – இந்திய ஊழியர்களுக்கு முன்னுரிமை

அதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் 16- ஆம் தேதி அன்று துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 6E 12 என்ற விமானம். அப்போது, நடுவானில் விமானம் பறந்துக் கொண்டிருந்த சூழலில், விமான பயணி ஒருவர் உணவு தொடர்பாக, விமான பணிப்பெண்ணுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த வீடியோ தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பயணி ஒருவர், விமானப் பணிப்பெண்ணிடம் விரலை நீட்டியபடி கத்தியுள்ளார். இதனால், அழுதபடியே, சக விமான பணிப்பெண்களுடன் கூறியுள்ளார். இந்த விசயம், விமான பணிப்பெண்களின் குழுவுக்கு தலைமை வகிக்கும் விமான பணிப்பெண் அதிகாரிக்கு சென்றுள்ளது.

இதையடுத்து, அந்த விமான பணிப்பெண், பயணியிடத்திற்கு சென்று, நீங்கள் எப்படி கத்தி பேசலாம். உங்களால் எங்களுடைய குழுவைச் சேர்ந்த விமான பணிப்பெண்கள் அழுதுக் கொண்டிருக்கின்றனர். உணவுப் பட்டியலில் இருப்பதைதான் கொடுக்க முடியும்.

கட்டுமான தளத்தில் விபத்து… பலத்த சத்தம் – பதறிய ஊழியர்கள்: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

இதற்கு பயணி, ஏன் என்னிடம் கத்திக் கொண்டிருக்கிறாய் என்று கேட்க, தலைமை விமான பணிப்பெண், விமான பணிப்பெண்களிடம் இப்படி பேசக்கூடாது என்றார்.

மேலும், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விமான பயணி, நீ எங்களுக்கு வேலைக்காரர் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த தலைமை விமான பணிப்பெண், நான் ஒன்னும் உங்களின் வேலைக்காரர் இல்லை; நான் விமான பணிப்பெண் என்று பதிலடிக் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய இந்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இண்டிகோ நிறுவனம், வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்திருக்கிறது. அவர்களுக்கு மரியாதையான தொந்தரவு இல்லாத பயணத்தையும், அனுபவத்தையும் வழங்குவதே எங்களின் நிலையான முயற்சி” என்று குறிப்பிட்டுள்ளது.