இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியருக்கு மரண தண்டனை விதித்த சிங்கப்பூர் உச்சநீதிமன்றம் – அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்

indo malaysian punished at singapore by high court to hanging due o heroin sieze

சிங்கப்பூர் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று மரண தண்டனைக்கு எதிரான கடைசி மேல்முறையீட்டை நிராகரித்தது. மனநலம் குன்றியவராக கருதப்படும் மலேசியாவைச் சேர்ந்த நாகேந்திரன் .கே தர்மலிங்கம் என்பவர் 2009ஆம் ஆண்டு Heroin போதை பொருளை கடத்தியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக அடுத்த ஆண்டு அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மனநலம் குன்றிய குற்றவாளியை முதலில் நவம்பரில் தூக்கிலிட திட்டமிடப்பட்டது. ஆனால் அவரது மனநலம் சார்ந்த குறைபாடுகள் குறித்த விவகாரங்கள் காரணமாக இந்த தண்டனைக்கு விமர்சனங்கள் எழுந்தன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்

மனநல குறைபாடுகள் உள்ள 34 வயதான நபரை, தூக்கிலிடுவது சர்வதேச சட்டத்தை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அவரது குடும்பத்தினர் அவருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை மீது மேல்முறையீடு செய்தனர். ஆனால் மரண தண்டனைக்கு எதிராக அளிக்கப்பட்ட மேல்முறையீடு சிங்கப்பூரின் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் உதவி செய்த மனித உரிமை வழக்கறிஞர் ,இனிமேல் மேல்முறையீடுகள் எதுவும் தாக்கல் செய்யப்பட மாட்டாது என்றும் இன்னும் சில நாட்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்றும் கூறினார்.

மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட பின் குற்றம்சாட்டப்பட்ட நாகேந்திரன் சிறை உடையில் வெள்ளை நிற முகமூடி அணிந்து தண்டனை நடவடிக்கையின்போது மிகவும் சோகமாக காணப்பட்டார். நாகேந்திரன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்