இந்தியாவை முந்திய இந்தோனேஷியா – சிங்கப்பூருக்கு அதிக அளவில் பயணிகளை அனுப்பி வைக்கும் நாடு எது தெரியுமா?

Photo: High Commission of India in Singapore Official Facebook Page

Covid-19 வைரஸ் தொற்று தொடங்கியதிலிருந்து சிங்கப்பூருக்கு வருகைபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தொடர்ந்து நான்காவது மாதமாக ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரின் சர்வதேச பயணிகள் வருகைகளின் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்து வருவதாக எல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Covid-19 தொற்று தொடங்குவதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1.6 மில்லியனுக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளன. ஆனால் தொற்று தொடங்கியதில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 2,94,300 பார்வையாளர்கள் சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ளதாக புள்ளி விவரப்பட்டியல் குறிப்பிடுகின்றன. இது மார்ச் மாதத்தில் 1,21,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவிலிருந்து 40,970 பயணிகள் சிங்கப்பூரை வந்தடைந்துள்ளனர். மார்ச் மாதத்தில் இது 27,530 ஆக இருந்தது. இந்தோனேசியாவிலிருந்து 58,270 பயணிகள் சிங்கப்பூரை வந்தடைந்ததால் எண்ணிக்கையில் இந்தியாவை இந்தோனேசியா முந்தியது. மார்ச் மாதத்தில் 13,620 பயணிகளை சிங்கப்பூருக்கு இந்தோனேசியா அனுப்பியுள்ளது.

2017 முதல் 19 வரை சிங்கப்பூருக்குள் நுழையும் பெரும்பாலான பயணிகள் சீனாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவர்கள். ஆனால் தற்பொழுது கடந்த ஏப்ரல் மாதத்தில் வெறும் 5000 பயணிகளை சீனா அனுப்பியது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 3,02,100 பயணிகளை சிங்கப்பூருக்கு சீன அனுப்பியது குறிப்பிடத்தக்கதாகும்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் சிங்கப்பூர் தனது எல்லைகளை முழுமையாக மீண்டும் திறந்ததிலிருந்து சர்வதேச பயணிகளுக்கான தேவையான சோதனைகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் நீக்கியது.