சிங்கப்பூருக்கு வந்த வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டார் – வெளிநாட்டு பயணி தொடர்பில் வெளியான பகீர் அறிவிப்பு!

(Photo: Ministry of Home Affairs)

சிங்கப்பூருக்கு வந்த இந்தோனேசிய நாட்டை சேர்ந்த மத போதகருக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப் பட்டது.

இதனை அடுத்து அவர் வந்த வழியே சொந்த நாட்டை நோக்கி அனுப்பப்பட்டார்.  தீவிரவாத கருத்துகளை போதிக்கும் பின்னணியை கொண்டவர் என்ற தகவல் தெரிந்ததால் அரசு சிங்கப்பூரில் நுழைய அனுமதி மறுத்தது.

அது போன்ற செயல்களை செய்ய சிங்கப்பூரில் இடம் இல்லை என்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அன்று மத போதகர் அப்துல் சோமத் பத்துபாராவும், அவருடன் மேலும் 6 பேரும்  சிங்கப் பூர் வந்ததாக சிங்கப்பூர் குடிவரவு அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

அவருடன் வந்த ஆறு பேரும் நுழைய அனுமதிக்கப்பட வில்லை. பாத்தாமிலிருந்து சிங்கப்பூர் தானா மேரா படகு முனையத்துக்கு வந்த அவர்கள், அதே படகு மூலம் மீண்டும் பாத்தாமுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் தற்கொலைத் தாக்குதலை ஆதரித்து அவர் கடந்த காலங்களில் பேசியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.