சிங்கப்பூர் சாலையில் காயம்பட்டு நடக்கமுடியாமல் தவித்த காட்டுப்பன்றி… “நான் இருக்கேன்!” என்று ஓடி உதவிய சூப்பர் மேன்!

சிங்கப்பூர் விரைவுச் சாலையின் நடுவில் நேற்று முன்தினம் (பிப். 21) அன்று காயம்பட்டு தவித்த காட்டுப்பன்றிக்கு நல்லுள்ளம் கொண்ட ஒருவர் உதவினார்.

SG Road Vigilante என்ற ஃபேஸ்புக் குழுவில் பகிரப்பட்ட வீடியோ, விரைவுச் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு: புதிதாக 26,032 பேருக்கு தொற்றுநோய் உறுதி

எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறாக அந்த காட்டுப்பன்றி காயத்துடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டு நின்றது.

பின்னர் கடவுள் போல வந்த நல்லுள்ளம் கொண்ட ஒருவர், காயம்பட்டு தவித்த காட்டுப்பன்றியை சிறிதும் தயங்காமல் சாலையின் நடுவில் இருந்து காப்பாற்றினார்.

அனைவரும் வேடிக்கை பார்த்து செல்கையில், ஒருவர் மட்டும் கலத்தில் இறங்கி உதவி செய்வது என்பது போற்றுதலுக்கு உரியது.

அவரின் இந்த மனிதநேய செயலை நெட்டிசன்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

சிங்கப்பூரில் சுவையான தமிழ்நாடு சைவ உணவுகள் எங்கே கிடைக்கும் தெரியுமா?