குற்றம் குற்றமே! – Instagram-இல் மத நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை வெளியிட்ட இளைஞருக்கு விதிக்கப்பட்ட தண்டனை

சிங்கப்பூரின் நிரந்தரக் குடியிருப்பாளரும் சீன நாட்டைச் சேர்ந்தவருமான சன் சிகோங் 18 ,இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ளார்.இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கடந்த மே மாதம் ஒப்புக்கொண்டார்.

பிற மதத்தினரின் சமய உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் கருத்துகளை பரப்பிய குற்றத்திற்காக 18 மாதங்கள் நன்னடத்தை கண்காணிப்பு தண்டனை வழங்கப் பட்டுள்ளது.அதாவது காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வெளியே செல்லக் கூடாது.மேலும் அறுபது மணி நேரம் இவர் சமூக பணியாற்ற வேண்டும்.இவரது நன்னடத்தையை உறுதி செய்வதற்காக பெற்றோர் 5000 வெள்ளியை பத்திரமாக அளித்துள்ளனர்.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் அவலக்கதையை ஆபாச வார்த்தைகளுடன் வெளியிட்டதாகவும் அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.குற்றம் சாட்டப்பட்ட சிகொங்கிற்கு தண்டனை விதிக்கும் போது தொந்தரவு விளைவித்த குற்றம் உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொண்டார்.

இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட பதிவுகளைக் கண்ட சிலர் ஆவேசமடைந்து பதில் அளித்ததால் பதிவு மீண்டும் இணையத்தில் தீயாகப் பரவியது.சுமார் 62 புகார்கள் பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்கு அளிக்கப்பட்டன.சிங்கப்பூரில் மதநல்லிணக்கதை பாதிக்கும் வகையில் செயல்பட்டால் ,அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரித்தனர்.