இரட்டை சிறுவர்கள் மரணம்: பல்வேறு மதத்தவர்களின் பிரார்த்தனை கூட்டம்

Inter-faith prayer session held at Greenridge Crescent playground
PHOTO: Sim Ann

கிரீன்ரிட்ஜ் கிரசென்ட் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜன. 21 இரவு 11 வயதுடைய இரட்டை ஆண் சிறுவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த மைதானத்தில் பல்வேறு மதத்தவர்களின் பிரார்த்தனை கூட்டம் நேற்று ஜன.23 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

“அழகு சாதனப் பொருள்” என கடத்தப்படவிருந்த போதைப்பொருள் – சோதனையில் சிக்கிய 24 வயது பெண்

இந்த பிராத்தனை கூட்டத்தில் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு மத குருமார்கள் கலந்து கொண்டனர்.

அப்பர் புக்கிட் திமாவில் நடைபெற்ற பிராத்தனை கூட்டத்தில் ஹாலந்து-புக்கிட் திமா GRCயின் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) சிம் ஆன் (Sim Ann) கலந்து கொண்டார்.

பிராத்தனை நடவடிக்கைகள் தொடங்கும் முன் அவர் ஒரு சிறிய உரையையும் அங்கு நிகழ்த்தினார்.

இந்த பிராத்தனை கூட்டம், அக்கம்பக்கத்தில் உள்ள தன்னார்வலர்களுடன் கலந்தாலோசித்த பிறகு விரைவாக அமைக்கப்பட்டதாக சிம் தனது உரையில் கூறினார்.

மாண்டாய் அவென்யூவில் கொழுந்து விட்டெரிந்த பைக்… தீக்கிரையாய் போன வாகனம் – மருத்துவமனையில் ஓட்டுநர்