சைபர் பாதுகாப்பு கொள்கை தொடர்பாக ஆலோசனை நடத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Singapore Ministry Of Foreign Affairs Facebook Page

 

சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று இரவு கிழக்கு ஆசியா, பசிபிக் மற்றும் சர்வதேச சைபர் பாதுகாப்பு கொள்கை தொடர்பாக செனட் வெளியுறவுக் குழுவின் (Senate Foreign Relations Committee- SFRC) (எஸ்.எஃப்.ஆர்.சி) துணைக்குழுவின் தலைவர் செனட்டர் எட்வர்ட் ஜே.மார்க்கியுடன் காணொளி காட்சி மூலம் பேசினார்.

 

இந்த கலந்துரையாடலின் போது கொரோனா ஆராய்ச்சி, டிஜிட்டல் மயமாக்கல், விநியோகச் சங்கிலிகள், காலநிலை மாற்றம், பிராந்திய முன்னேற்றங்கள் உள்ளிட்டவைக் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எங்கள் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அதிக ஈடுபாட்டையும் சிங்கப்பூர் வரவேற்கிறது எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவலை சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.