‘சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்’- வீடியோவைப் பதிவிடுங்கள் பரிசுகளை வெல்லுங்கள்!

Photo: MWC

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் வரும் டிசம்பர் 18- ஆம் தேதி அன்று கொண்டாடப்படவுள்ளது. இந்த தினத்தை புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் கொண்டாட பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள், சீனர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மகிழ்விக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது (Migrant Worker’s Centre- ‘MWC’).

“சிங்கிலிஷ்” பாஷை பேசியே சிங்கப்பூர் தமிழர்கள் சம்பாதித்து வைத்துள்ள அவப்பெயர்!

இது தொடர்பாக ‘MWC’ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் என்பது உலகம் முழுவதும் உள்ள இடங்களில் புலம்பெயர்ந்தோர் செய்த தியாகங்கள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இன்று ஒவ்வொரு வளர்ந்த தேசத்திற்கும் புலம்பெயர்ந்தோரின் மிகப்பெரிய ஆதரவு தேவைப்படுகிறது.

சிங்கப்பூரில் குடியேறியவர்களின் பல உண்மைக் கதைகளை பகிர்ந்து கொள்ளும் வகையிலான அருமையான திட்டத்தை ‘MWC’ முன்னெடுத்துள்ளது. தொழிலாளர்கள் தங்களின் வாழ்க்கை கதைகளை வீடியோவில் பதிவிட்டு 90554109 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு முதன்முறையாக, 10,000க்கும் அதிகமான சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள பண வவுச்சர்கள் மற்றும் பரிசுகளையும் வழங்குகிறோம். இது புலம் பெயர்ந்த நமது சகோதரர்களுக்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய பரிசுத்தொகையாகும். இந்த அறிவிப்பை தங்களின் நண்பர்களுக்கு பகிருங்கள்.

சிங்கப்பூரில் மேலும் 559 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

இத்திட்டத்தின் மூலம் பல சகோதரர்கள் பயன்பெறுவார்கள் என நம்புகிறோம். எனவே, இன்றே பதிவு செய்து https://fb.me/e/2Oa6jm3tN பரிசுகளைப் பெற வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சியின் போது எங்களுடன் இந்தியாவிலிருந்து சில சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இது தொடர்பான அப்டேட்டுகளுக்கு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஃபேஸ்புக் பேஜை பின் தொடருங்கள்.

வெற்றியாளர்களுக்கு வரும் டிசம்பர் 19- ஆம் தேதி அன்று இரவு 07.30 PM மணிக்கு நடைபெறும் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தின விழா கொண்டாடட்டத்தின் போது வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.