குடும்பங்களை பிரிந்து, பல இன்னல்களை கடந்து வாடும் வெளிநாட்டு ஊழியர்கள் – “கவனித்துக்கொள்ள முழு சமூக முயற்சியும் தேவை”

Tan See Leng/FB

கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் நடைபெற்ற சர்வதேச புலம்பெயர்ந்தோர் தின கொண்டாட்ட நிகழ்வில் மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் கலந்து கொண்டார்.

இந்த ஆண்டு கொண்டாட்டங்களின் கருப்பொருள் “கைகளை ஒன்றிணைத்து, ஒற்றுமை பிணைப்புகளை உருவாக்குதல்” என்பதாகும்.

புலம்பெயர்ந்த ஊழியர்களையே அதிகம் சார்ந்துள்ள கட்டுமானம், கடல் துறை – தரத்தை மேம்படுத்த திட்டம்

சிங்கப்பூரின் மதிப்புமிக்க பங்காளிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள், இந்த சிறப்பு விழாவைக் கொண்டாட ஒன்றுசேர்ந்ததைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் டாக்டர் டான்.

வெளிநாட்டு ஊழியர்களைக் கவனித்துக்கொள்வதற்கு முழு சமூக முயற்சியும் தேவைப்படுகிறது என்று கூறிய அவர், அது இந்த கொண்டாட்டங்களில் வெளிப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன், என்றார்.

கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

“வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கும் பல்வேறு நடவடிக்கைகள், அரசு சாரா நிறுவனங்கள், தங்கும் விடுதி ஆபரேட்டர்கள், முதலாளிகள் மற்றும் இளைஞர் குழுக்கள் போன்ற கூட்டாளிகளின் ஆதரவு இல்லாமல் சாத்தியமில்லை.”

“தங்கும் விடுதியில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முன், “ஓமிக்ரான்” பற்றி புரிந்து கொள்ள அதிக நேரம் தேவை”