‘அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்’- சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்!

Photo: Singapore President Official Facebook Page

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “இன்று காலை, 8- வது சிங்கப்பூர் மகளிர் ஹால் ஆஃப் ஃபேம் அறிமுக விழாவில் (8th Singapore Women’s Hall of Fame induction ceremony), ஏழு சிறந்த பெண்களின் சாதனைகளைக் கொண்டாடினோம். அவர்கள் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சிங்கப்பூரில் 95- ஆக்டேன் பெட்ரோல் விலை உயர்வு!

இந்த குறிப்பிடத்தக்க பெண்கள் சிங்கப்பூரில் தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். புதிய தடைகளை உடைப்பதில் அவர்களின் ஆர்வம், இடைவிடாத முயற்சி மற்றும் விடாமுயற்சி ஆகியவை பல தலைமுறைகளுக்கு சிங்கப்பூரர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

‘நட்பில்லா’ நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரை சேர்த்துள்ளது ரஷ்யா!

அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.