சிங்கப்பூரில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்…. ஏராளமானோர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி!

Photo: High Commission of India in Singapore

 

 

9ஆவது சர்வதேச யோகா தினம் (International Yoga Day) ஜூன் 21- ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைமை அலுவலகத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஐ.நா. பிரதிநிதிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒரே நேரத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் யோகாசனம் செய்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழ் ஊழியரின் திருமணம்… அறந்தாங்கி வந்த சிங்கப்பூர் முதலாளி, மேலாளர் – விழாக்கோலம் பூண்ட கிராமம்

அதேபோல், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான மண்டபத்தில் ஜூன் 21- ஆம் தேதி அன்று காலை 08.00 மணிக்கு சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன், இந்திய தூதரக அதிகாரிகள், சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிங்கப்பூரில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்.... ஏராளமானோர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி!

நிகழ்ச்சியில், யோகா ஆசிரியர்கள் பயிற்சியளிக்க, மற்றவர்கள் யோகாசனம் செய்து அசத்தினர். மேலும், யோகா கலையின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது.

போக்குவரத்து போலீசாரின் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து: ஆடவர் மரணம்

நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய தூதர் பெரியசாமி குமரன், “தினமும் யோகா செய்வதால், மனம், உடல்நலம் மேம்படும். நமது உடலின் ஆரோக்கியமும் மேம்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து அறக்கட்டளை வாரியம், தி கமலா கிளப், இந்திய தூதரகம், எஸ்பிஐ சிங்கப்பூர் ஆகிய குழுவினர் செய்திருந்தனர்.