ஐபோன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தல்!

ஐபோன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தல் !
Photo: Apples

 

ஆப்பிள் ஐபோன்களை அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டாம் என ஐபோன்களைப் பயன்படுத்துபவர்களை ஆப்பிள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

பொம்மைகளில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்த பயணி….சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி! (வீடியோ)

உலக அளவில் மிகவும் பிரபல நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள் நிறுவனம். செல்போன்கள் மற்றும் கணினிகள், ஹெட்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை விட, ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களின் விலை பல மடங்கு அதிகம்.

இந்த நிலையில், ஆப்பிள் ஃபோன் எனப்படும் ஐபோன்களைப் பயன்படுத்துவர்களுக்கான முக்கிய அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஐபோன்களை சார்ஜரில் போட்டுவிட்டுத் தூங்கச் செல்லக் கூடாது. தலையணை (அல்லது) போர்வைக்கு அடியில் ஃபோனை வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய லேண்டர்!

ஃபோன்களை சார்ஜ் செய்யும் போது, அதிக வெப்பம் வெளியேறும் என்பதால், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனம், வீட்டில் காற்றோட்டமாக இருக்குமிடத்தில் சார்ஜ் போடுவதற்கான அமைப்பை உருவாக்கிக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.