IRAS ஃபிஷிங் மோசடியில் S$37,400 வரை இழப்பு – செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் !

iras scam fake sms

சிங்கப்பூர் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (IRAS) ஜூலை 2022 முதல் ஃபிஷிங் மோசடிகளில் திடீர் எழுச்சியைக் கண்டுள்ளன. மோசடி செய்பவர்கள் IRAS ஆக ஆள்மாறாட்டம் செய்து SMSகள் மூலம் குறிவைக்கின்றார்கள். இதுவரை 51 பேர் இந்த மோசடிக்கு இரையாகி உள்ளனர், மொத்தம் S$37,400 வரை இழந்துள்ளனர்.

 

இந்த மோசடி பின்வரும் வரிசையில் நிகழ்ந்துள்ளது:

  1. IRAS பெயரில் SMSகளை பெற்றுள்ளார்கள். மேலும் தங்கள் வரி மதிப்பாய்வு/பரிசோதனையை SMSஇல் உள்ள linkஇன் மூலம் அவசரமாக முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
  2. SMS இல் உள்ள linkஐ கிளிக் செய்யும் போது, போலியான Singpass உள்நுழைவு பக்கத்திற்கு அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்கள் தங்கள் Singpass ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.
  3. அதன்பிறகு IRAS இணையதளம் போல தோற்றமளிக்கும் மற்றொரு போலி வலைப்பக்கத்திற்கும், இறுதியாக போலியான வங்கி உள்நுழைவுப் பக்கத்திற்கும் திருப்பி விடப்பட்டுள்ளார்கள்.
  4. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மொபைல் போன்களில் பெறப்பட்ட Internet banking credentials மற்றும் OTP களை உள்ளிடுமாறு கோரப்பட்டுள்ளார்கள். இறுதியில் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் குறித்து அறிவிக்கப்படும்போதுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்கள்.

 

காவல்துறை மற்றும் IRAS பொது மக்களை விழிப்புடன் இருக்குமாறும், பின்வரும் குற்றத் தடுப்பு நினைவூட்டல்களை கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளன:

  1. உங்கள் சிங்பாஸ் உள்நுழைவு விவரங்கள் மற்றும் கடவுச்சொற்களை உள்ளிடுமாறு கேட்கும் இணைப்புகளைக் கொண்ட SMSகளை IRAS அனுப்பாது.
  2. உங்களின் வருமான வரி நிலை பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ IRAS இணையதளத்தில் எப்போதும் சரிபார்க்கவும்.
  3. முகவரிப் பட்டியில் நீங்கள் அணுகும் சிங்பாஸ் இணையதள டொமைன் gov.sg மற்றும் ‘லாக்’ ஐகானுடன் இருக்கிறதா என உறுதிசெய்து கொள்ளவும்.
  4. பயனர்கள் சிங்பாஸில் பதிவுசெய்யப்பட்ட தொடர்பு விவரங்களைப் புதுப்பித்து, அவர்களின் சிங்பாஸ் செயலி மூலம் அறிவிப்புகளை இயக்குவதன் மூலம் சந்தேகத்திற்கிடமான உள்நுழைவுகளைப் பற்றி உடனடியாகத் தெரிவிக்கலாம். எடுத்துக்காட்டாக புதிய சாதனம் அல்லது இணைய ப்ரௌசரில் உள்நுழைவது கண்டறியப்பட்டால், அவர்களின் கணக்கைப் பாதுகாக்க சிங்பாஸைத் தொடர்புகொள்ளலாம்.
  5. “.sg” என்று முடிவடையும் டொமைன்களைக் கொண்ட இணையதளங்களில் மட்டுமே அரசாங்க சேவைகளுக்கான உள்நுழைவுகள் செய்யப்பட வேண்டும். “.gov.sg” என்று முடிவடையாத இணைப்பை நீங்கள் பெற்றிருந்தால், www.gov.sg/trusted-sites இல் உள்ள நம்பகமான இணையதளங்களின் பட்டியலில் சரிபார்க்கவும்.
  6. உங்கள் தனிப்பட்ட விவரங்கள், இணைய வங்கி விவரங்கள் மற்றும் OTPகளை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.
  7. மோசடியான பரிவர்த்தனைகளை உடனடியாக உங்கள் வங்கிக்கு தெரிவிக்கவும்.

 

இம்மோசடி தொடர்பான ஏதேனும் தகவல் அறிந்தவர்கள், 1800-255-0000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் அறிக்கைகளை சமர்ப்பிக்கலாம்.

பொது மக்கள், இம்மோசடிகள் பற்றி தெரிந்து கொள்ள www.scamalert.sg ஐப் பார்வையிடலாம்.  மேலும் தகவல்களுக்கு 1800-722-6688 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.