விமானம் ரத்து: Scoot, SIA விமானங்களை சாடிய வெளிநாட்டவர் – ஒழுங்கீனமில்லை என காட்டம்

scoot-changi-airport
irenecaselli / Twitter and Changi Airport

வெளிநாட்டு பத்திரிக்கையாளர் செல்லவிருந்த ஸ்கூட் விமானம் ரத்து செய்யப்பட்ட பிறகு, வேறு வழியின்றி சாங்கி விமான நிலையத்தின் தரையிலேயே அவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஐரீன் கேசெல்லி (Irene Caselli) என்ற அந்த பத்திரிக்கையாளர் தனது ட்விட்டர் கணக்கில், ஸ்கூட் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) ஆகிய இரண்டையும் குறை கூறினார், அவர் அங்கு நடந்த முழு சம்பவத்தையும் வெளிக்காட்டினார்.

சிங்கப்பூரில் ஒரே வீட்டில், வேறு வேறு குடும்பத்தைச் சார்ந்த நபர்கள் வாடகைக்கு இருக்கலாமா?

கேசெல்லி தற்போது கிரீஸில் உள்ள ஒரு பத்திரிகையாளர். அவர் இதுபற்றி, “ஒழுங்கமைவின்மை” என்றும் விவரித்தார்.

மேலும், பனிப்புயல் காரணமாக ஏதென்ஸுக்கான விமானம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அதற்கான மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (ஜன. 25) நள்ளிரவுக்குப் பிறகு நடந்த அவலநிலை குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.

கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக குழந்தையுடன் அவரது குடும்பத்தினரும் சாங்கி விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியவில்லை.

மேலும் அங்குள்ள ஹோட்டல்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.

மேலும், ஊழியர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை என்றும், ஏதென்ஸுக்கு மாற்று விமானத்தை முன்பதிவு செய்ய எந்தவிதமான இழப்பீடும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

விமான நிலையத்தில் சிக்கித் தவித்த அவர், தனது குழந்தைக்கு தரையில் தூங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.