ஜன.8- ல் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், இருமுடி திருவிழா!

Photo: Hindu Endowments Board Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (Sri Vairavimada Kaliamman Temple). இந்த கோயில் 2001 லோர் 8 தோவா பயோஹ்-க்கில் (2001 Lor 8 Toa Payoh) அமைந்துள்ளது. இந்த கோயிலில், வரும் ஜனவரி 8- ஆம் தேதி அன்று இருமுடி திருவிழா நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

தவறான செயல்களுக்காக 7 பெண்கள் கைது – போலீசார் விசாரணை

ஜனவரி 8- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இருமுடி வழங்க பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். ஜனவரி 8- ஆம் தேதி அன்று காலை 07.30 மணிக்கு சங்கல்பம் பூஜையும், காலை 07.45 மணிக்கு கலச பூஜையும், காலை 08.00 மணிக்கு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி காயத்ரிமந்தர ஜெபம், ஹோமமும் (Sri Ayyappan Swamy Gayathrimanthra Jabam, Homam), காலை 08.30 மணிக்கு பூர்ணாஷுதி, தீபாராதனையும் (Poornahuthy, Deeparathanai), காலை 08.45 மணிக்கு இருமுடி கட்டுதல் நிகழ்வும், காலை 10.30 மணிக்கு ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இருமுடி நெய் அபிஷேகமும், காலை 11.45 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மஹா தீபாராதனையும், மதியம் 12.00 மணிக்கு மகேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ சிவன் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்!

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணையோ (அல்லது) https://heb.org.sg/?lang=ta என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தையோ அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.