இஸ்தானா மாளிகைக்குள் நுழைவதற்கு மீண்டும் அனுமதி – பார்வையாளர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்று ஜனாதிபதி அலுவலகம் வலியுறுத்தல்

சிங்கப்பூர் அதிபர் மற்றும் பிரதமரின் மாளிகையாக கருதப்படும் இஸ்தானா மாளிகை Covid -19 வைரஸ் தொற்று காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது. வைரஸ் தொற்று காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் இஸ்தானாவில் நடத்தப்படும் மாநில நிகழ்வுகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது Covid-19 வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்துள்ளதால் ,நீண்ட நாட்களுக்குப் பின்னர் முதல்முறையாக பார்வையாளர்கள் இஸ்தானாவின் பிரதான கட்டிடத்திற்குள் நுழைவதற்கு அனுமதி சீட்டுகளை வாங்க முடியும். மேலும் மாநில நிகழ்வுகளை மாளிகையில் நடத்துவதற்கான தடையும் நீக்கப்பட்டது.

பார்வையாளர்கள் இஸ்தானாவின் கட்டிடத்திற்குள் உள்ள அறைகளின் அமைப்புகளையும், மாநில பரிசுகளையும் பார்வையிடலாம். கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து திறந்தவெளி நிகழ்வுகள் தொடங்கப்பட்டதால், இஸ்தானாவின் வெளிப்புற தோட்டங்களை மட்டுமே பார்வையாளர்களால் பார்வையிட முடிந்தது.

பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும், பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும். பார்வையாளர்கள் முக கவசம் அணிந்து இருக்கவேண்டுமென்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மாளிகையின் மைதானத்திற்குள் நுழைவது இலவசம் இருப்பினும் பார்வையிட விரும்புபவர்கள் டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இரண்டு மணி நேர இடைவெளியில் 5 டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பிக்க இயலும். டிக்கெட்டுகள் அதிகமாக இருந்தால் மின்னணு வாக்குப்பதிவு மூலம் ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது. குழந்தைகளுக்கும் மைதானத்திற்குள் நுழைவதற்கான அனுமதிச் சீட்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.