இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தம் இதுதான்… இஸ்தானாவில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட மலேசியப் பிரதமர்!!

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்கள் இன்று (ஜனவரி 30) அதிகாரப்பூர்வ பயணமாக சிங்கப்பூருக்கு வந்துள்ளார். மேலும் அவர் இஸ்தானாவில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அவரது வருகையைத் தொடர்ந்து டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளியல், தனிப்பட்ட தரவு பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளன.

ஒப்பந்தங்களின்படி, இரு நாடுகளிலும் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. அத்துடன் இரு தரப்புக்கும் சாதகமான திட்டங்களில் ஒத்துழைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் தனிநபர் தரவு பாதுகாப்புப் பற்றிய ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. மேலும் இணையம் தொடர்பான மோசடிகளைச் சமாளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.