சீனப் புத்தாண்டையொட்டி, பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் இஸ்தானா!

Photo: Istana Open House

சீனப் புத்தாண்டையொட்டி, இஸ்தானா அதிபர் மாளிகை (Istana Open House- ‘IOH’) வரும் பிப்ரவரி மாதம் 5- ஆம் தேதி அன்று பொதுமக்களுக்காகத் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

JUSTIN: சிங்கப்பூரில் Omicron தொடர்பான முதல் மரணம் பதிவு

இது தொடர்பாக இஸ்தானா அதிபர் மாளிகை நேற்று முன்தினம் (21/01/2022) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் சிங்கப்பூரில் உள்ள இஸ்தானா அதிபர் மாளிகை பொதுமக்களுக்காக வரும் பிப்ரவரி மாதம் 5- ஆம் தேதி திறக்கப்படுகிறது. எனவே, இஸ்தானாவிற்கு வர விரும்புவோர்கள் இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டுகளுக்கு (Tickets) விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுச்சீட்டு விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை; முற்றிலும் இலவசம் ஆகும்.

https://tinyurl.com/lnyioh22 என்ற இணையதள பக்கத்திற்கு சென்று நுழைவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். நுழைவுச்சீட்டுக்கான விண்ணப்பப்பதிவு நாளை (24/01/2022) காலை 10.00 AM மணிக்கு தொடங்குகிறது. நாளை மறுநாள் (25/01/2022) காலை 10.00 AM மணி வரை நுழைவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் அதிகபட்சம் ஐந்து பேருக்கு நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும்.

மோசடிகளில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?- வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய ‘DBS’ வங்கி!

எத்தனை மணிக்கு இஸ்தானாவிற்கு செல்லப் போகிறோம் என்பது குறித்த நேரத்தை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். காலை 09.00 AM, 11.00 AM, மதியம் 01.00 PM மணி, பிற்பகல் 03.00 PM ஆகிய வேளைகளில் செல்லலாம். இஸ்தானாவில் இரண்டு மணி நேரம் இருக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மின்னணு முறையில் டிக்கெட்டுகள் (Electronic Balloting System) ஒதுக்கப்படும்.

இஸ்தானா அதிபர் மாளிகைக்கு வருபவர்கள் கட்டாயம் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உணவு விற்கும் வாகனங்கள் (Food Trucks)  போன்ற இருக்காது. மாளிகையில் வெளிப்புறத் தோட்டங்களுக்கு (Outdoor Gardens) மட்டுமே பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான், கூடுதல் விவரங்களுக்கு https://www.istana.gov.sg/Visit-And-Explore/Istana-Open-House என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.

எந்தெந்த நாடுகளுடன் சிங்கப்பூர் அரசு ‘VTL’ ஒப்பந்தம் செய்துள்ளது?- விரிவான தகவல்!

கடைசியாக, கடந்த ஆண்டு நவம்பர் 4- ஆம் தேதி தீபாவளி திருநாளையொட்டி, இஸ்தானா அதிபர் மாளிகை பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.