பெண் ஊழியர்களுக்கு ஆதரவு! – இஸ்தானாவில் NTUC மகளிர்குழுவுடன் கலந்துரையாடிய அதிபர்

சிங்கப்பூரில் பெரும்பாலான மகளிர் இன்னமும் வீடுகளில் முக்கிய பராமரிப்பாளர்களாக உள்ள நிலையில், அவர்கள் ஊழியரணியில் சேர்ந்து அதில் நீடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியிருக்கிறார்.

இஸ்தானாவில் அதிபர் ஹலிமா நேற்று NTUC மகளிர் குழுத் தலைவிகளுடன் கலந்துரையாடினார்.பெரும்பாலான முதலாளிகள் வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற நீக்குப்போக்கான வேலை நடைமுறைகளை பின்பற்றுகின்றனர்.இந்நிலையில் ஊழியரணியில் பெண்களைத் தக்கவைத்துக்கொள்ள அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

ஊழியரணியில் இருந்து விலகி ஆண்டுக்கணக்கில் வேலையின்றி இருக்கும் பெண்களை மீண்டும் பயிற்சியளித்து வேகமாக மாறியுள்ள ஊழியரணியில் மீண்டும் இணைப்பது சிரமம் என்பதால் அவர்களை அணியில் தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது அவசியம்.

இதில்தான் நீக்குப்போக்கான வேலை நடைமுறைகள் முக்கியப்பங்கு வகிப்பதாக அதிபர் கூறினார்.தொழிலாளர் அமைப்பில் 50 சதவீதத்தினர் பெண்கள் பங்களிக்கின்றனர்.

அதாவது 2,98,000 பெண்கள் உள்ளனர்.பெண் ஊழியர்களின் குறைகளைக் கேட்கவும் ஆண்-பெண் ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்யவும் மகளிர்குழுத் தலைவிகள் முக்கியப் பங்காற்றுவதாகவும் அதிபர் கூறினார்.