சிங்கப்பூரில் 47,000-க்கும் மேற்பட்டவர்களின் தகவல் திருட்டு; நிறுவனத்திற்கு $60,000 அபராதம்!

IT vendor fined after data of 47,800 students, parents and staff of Singapore schools hacked

சிங்கப்பூரில் சுமார் 47,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளின் ஊழியர்களின் தனிப்பட்ட விபரங்கள் ஹேக் செய்யப்பட்டதன் எதிரொலியாக தகவல் தொழில்நுட்ப லியர்னஹோலிக் நிறுவனத்துக்கு S$60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு கல்வி அமைச்சகத்தின் ஒப்பந்தத்தின் கீழ் சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளுக்கு வருகை மற்றும் மின்னணு-கற்றல் முறைகள் உள்ளிட்ட சேவைகளை வழங்கியுள்ளது.

இருப்பினும், அதன் பாதுகாப்புகளில் ஏற்பட்ட குறைபாடுகள் சுமார் 47,802 மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளின் ஊழியர்களின் தனிப்பட்ட தரவுகளை ஹேக் செய்ய வழிவகுத்தன, என்று தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையம் (PDPC) வியாழக்கிழமை (டிசம்பர் 5) தெரிவித்துள்ளது.

இந்த குறைபாடுகள் காரணமாக, பெயர்கள், NRIC எண்கள், தொடர்பு எண்கள், மின்னஞ்சல் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவை ஒரு ஹேக்கர் திருட முடிந்துள்ளது, என்றும் கூறப்படுகிறது.

சுமார் 372 மாணவர்களின் மருத்துவ தகவல்களும் இதில் திருடப்பட்டுள்ளன.

இதற்கிடையே லெர்னஹோலிக்’ நிறுவனம் அதன் இணையத்தளத்தை முடக்கிவிட்டதாகவும், அத்துடன் அதன் தொடர்பு எண்ணும் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Source : CNA

உங்கள் அருகாமையில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் நம் சிங்கப்பூர் தமிழர்களுக்கு பயனுள்ள தகவல்களை எங்களுடன் பகிரவும்.

WhatsApp : wa.me/6588393569

Messenger : m.me/tamilmicsetsg