வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக குவிந்த காலணிகள்! – ‘இட்ஸ்ரெயினிங் ரெயின்கோட்ஸ்’ அமைப்பின் கோரிக்கை

migrant-workers stray dogs-cats bonds
ItsRainingRaincoats/Facebook
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ‘இட்ஸ்ரெயினிங் ரெயின்கோட்ஸ்’ என்ற அமைப்பு செயல்படுகிறது.இந்த அமைப்பு விளையாட்டு தின விழாவை வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக நடத்தியது.
விளையாட்டு நிகழ்ச்சிகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பங்கேற்றனர்.அவர்கள் கலந்துகொண்ட போது,அவர்களிடம் விளையாட்டுக் காலணிகள் இல்லை என்பதை இந்த அமைப்பு தெரிந்து கொண்டது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு விளையாட்டு காலணிகளை வழங்க அமைப்பு முடிவு செய்தது.உடனடியாக இந்த தொண்டு நிறுவனம்,ஆகஸ்ட் 17-ஆம் தேதி முகநூலில் கோரிக்கை பதிவினை வெளியிட்டது.
அந்த பதிவில் விளையாட்டுக் காலணிகளை வெளிநாட்டு ஊழியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கும்படி கேட்டுக்கொண்டது.

அன்பளிப்பாக வரும் விளையாட்டுக் காலணிகளை சிங்கப்பூர் முழுவதிலும் வசிக்கும் இந்த அமைப்பின் வெளிநாட்டு தொழிலாளர்களின் வீடுகளில் கொடுக்கலாம் என்றும் அது தெரிவித்தது.இந்த லாப நோக்கமற்ற அமைப்பின் பதிவினைக் கண்ட பலரும்
காலணி ஜோடிகளை அன்பளிப்பாக கொடுத்தனர்.இதன் விளைவாக ஐந்தே நாட்களில் நூற்றுக்கணக்கான ஜோடி காலணிகள் திரண்டன.ஏற்கனவே பயன்படுத்திய காலணிகளும் மற்றும் புதிய காலணிகளும் அவற்றில் அடங்கும்.

இந்த அமைப்பைத் தோற்றுவித்த தீபா சுவாமிநாதன் ‘காலணிகள் மலைபோல் குவிந்துவிட்டன’ என்று கூறினார்.