வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசம்! – சிங்கப்பூரைத் தங்கள் தாய்நாடாக எண்ணுங்கள்!

ItsRainingRaincoats

வெளிநாட்டு ஊழியர்களுக்கென சிங்கப்பூரின் அப்பர் பாய லேபாரில் புதிதாக கடைத் திறக்கப்பட்டுள்ளது.இந்தக் கடையில், குடைகள், பைகள்,காலணிகள், காற்றாடிகள், மெத்தைகள்,தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை இனி இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கென பிரத்தியேகமாக திறக்கப்பட்டுள்ள இந்த கடையானது ‘ItsRainingRainCoats’, ‘InspIRRe’ என்ற அமைப்புகளினால் தொடங்கப்பட்டது.சிங்கப்பூரில் பொதுமக்கள் நன்கொடையாக வழங்கும் பொருள்கள் அந்தக் கடையில் வைக்கப்படும்.

கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் கடை இயங்கும்.மேல்தளத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் ஓய்வு எடுக்கவும் ItsRainingRainCoats அமைப்பின் ஊழியர்கள் பணியாற்றவும் இடவசதி இருக்கும்.InspIRRe கடையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இலவச இணைய இணைப்புள்ள இந்த அறை குளிரூட்டப்பட்ட நிலையில் இருக்கும்.விடுமுறை நாட்களில் நண்பர்களைச் சந்தித்து பேசவும் படிக்கவும் தனிப்பட்ட இடத்தை விரும்பும் ஊழியர்கள் இந்த அறையைப் பயன்படுத்தலாம்.

கடைக்கு வரும் முன்,அமைப்பின் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும்.கடைத் திறப்புவிழாவில் பங்கேற்ற மனிதவள அமைச்சகத்தின் மூத்த இணை அமைச்சர் ஜாக்கி,சிங்கப்பூரின் ஒரு அங்கமாக செயல்படும் வெளிநாட்டு ஊழியர்களை மக்கள் வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது.அதேபோல, வெளிநாட்டு ஊழியர்களும் சிங்கப்பூரை தங்கள் தாய்நாடு போல எண்ண வேண்டும் என்று கூறினார்.