வேலையை முடித்து களைத்துப் போன வெளிநாட்டு ஊழியர்கள் லாரியில் ஏற்றி அனுப்பப்படுவது பாதுகாப்பா? – களைப்பிலும் லாரியை ஓட்ட முடியுமா!

வெளிநாட்டு ஊழிய

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை அவர்களது வேலை முடிந்தவுடன் அவர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளை பல ஆதாரவுக் குழுக்கள் வரவேற்றுள்ளன.ஆனால்,லாரிகளில் செல்லும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம் என்று குழுக்கள் வலியுறுத்தின.

பணியிடத்தில் குறைந்தபட்சம் ஆறு மணிநேரம் வேலை செய்த ஊழியர்கள்,அரை மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே,மற்றவர்களை லாரியின் பின்புறத்தில் ஏற்றிச் செல்ல முடியும்.லாரி ஓட்டுனர் வாகனத்தைச் செலுத்தும் நிலையில் உள்ளார் என்பதை உறுதி செய்வதற்கு ஒரு ஊழியரும் நியமிக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு இடைவேளை நேரத்திலிருந்து ஓய்வு நேரத்தை கழிப்பது போன்ற செயல்களில் நிறுவனங்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய அவ்வப்போது சோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்று ItsRainingRaincoats சமூக அமைப்பின் நிறுவனர் தீபா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதுகாப்பை உறுதிசெய்யலாம் என்றும் குழுக்கள் தெரிவித்தன.

ஊழியர்களில் ஒருவர் லாரியை ஓட்டுவதற்குப் பதிலாக அதெற்கென ஒரு ஊழியரை வேலையில் அமர்த்தலாம் என்று தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் துணைத் தலைமைச் செயலாளர் மெல்வின் யோங் (Melvin Yong) கூறினார்.ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதிமுறைகள் வரும் ஜனவரி முதல் தேதி நடப்புக்கு வரும்.