‘புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பீசாக்களை வழங்கிய ItsRainingRaincoats’!

Photo: ItsRainingRaincoats Official Facebook Page

சிங்கப்பூரில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ‘ItsRainingRaincoats’ என்ற அமைப்பு தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது, குறிப்பாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவுகள், உடைகள் உள்ளிட்டவைகளை அவர்கள் பணிபுரியும் இடத்திற்கே சென்று வழங்கி வருகிறது.

‘மதுரை, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்’!

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விழாக் காலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் ItsRainingRaincoats வழங்கி வருகிறது. இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.

அந்த வகையில், வரும் அக்டோபர் 24- ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதனை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் கொண்டாட முடிவு செய்த ItsRainingRaincoats அமைப்பு, ‘Deepavali Drive 2022’ என்ற பெயரில் நன்கொடை வழங்குமாறு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் கடுமையாக மோதிய பேருந்து… சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் பலி

அந்த நன்கொடையை வைத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பீசா உணவுகளை வழங்கி வருகிறது. இதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கி உணருந்தினர். இந்த பீசாக்களை ‘AltPizza’ என்ற நிறுவனத்துடன் இணைந்து வழங்கி வருகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுவையான பீசாக்களை தயாரித்து வழங்கி வரும் ‘AltPizza’- க்கு ItsRainingRaincoats அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.