லிட்டில் இந்தியாவில் உள்ள கடைக்கு S$5,000 அபராதம் – ஏன் தெரியுமா?

ittle India shop fined
Photo: Getty

லிட்டில் இந்தியாவில் உள்ள கடை ஒன்று அனுமதிக்கப்பட்ட வியாபார நேரங்களைக் கடந்தும் மதுபானங்களை விற்றதற்காக S$5,000 அபராதத்தை சந்தித்துள்ளது

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி திரும்பத் திரும்ப வியாபாரம் செய்ததாக மார்ட் நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 29) அபராதம் விதிக்கப்பட்டது.

இந்திய ஊழியர்களை ஈர்த்த “சிங்கப்பூர் வேலை விளம்பரம்” – வேலைக்கு வழங்கப்பட்ட சிறப்புகளை கண்டு வாயடைத்து போன ஊழியர்கள்

662 பஃபலோ ரோட்டில் அமைந்துள்ள ஃபேர்வே மார்ட், 2021 டிசம்பர் 5 முதல் 2022 அக்டோபர் 15 வரை அந்த குற்றத்தை செய்துள்ளது.

அதாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் இரவு 7 மணிக்கு மேல் நான்கு பேருக்கு அது மதுபானம் விற்றது கண்டறியப்பட்டது.

மதுபானக் கட்டுப்பாடு (விநியோகம் மற்றும் நுகர்வு) சட்டத்தின் கீழ் அந்த மார்ட்டின் பிரதிநிதி ஒருவர் ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

ஃபேர்வே மார்ட், 2021 நவம்பர் 9 முதல் 2022 நவம்பர் 8 வரை செல்லுபடியாகும் மதுபான உரிமம் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

ஃபேர்வே மார்ட் முன்னதாக பிரதீப் இன்டர்நேஷனல் டிரேடிங் என்ற பெயரில் இயங்கி வந்தது.

ஆனால் மதுபானக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், 2020 ஆம் ஆண்டில் பிரதீப் இன்டர்நேஷனல் பெயரின் உரிமத்தை இழந்தது விசாரணையில் தெரியவந்தது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்