சிங்கப்பூரின் மிக உயரிய தேசிய விருதைப் பெற்றார் J.Y. பிள்ளை..!

President Halimah Yacob presenting the Order of Temasek (With Distinction) to Mr J.Y. Pillay, who was the longest-serving chairman of the Council of Presidential Advisers, having led it from 2005 until January this year.

கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து, 2019 ஜனவரி வரை அதிபர் ஆலோசகர் மன்றத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த திரு. J. Y. பிள்ளைக்கு, மிக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய தின விருதுகளை ஜனாதிபதி ஹலிமா யாகோப் நேற்று வழங்கினார். இதில் 511 நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருதுகள் பட்டியலில், மூத்த சிவில் ஊழியர் J. Y. பிள்ளை அவர்களுக்கு Order of Temasek விருது, சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னிகல் எஜுகேஷன் (ஐ.டி.இ) கல்லூரியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

கலை, சட்டம், அரசாங்கச் சேவை உட்பட பல்வேறு துறைகளில் சமூகத்துக்குப் பங்காற்றிய தலைவர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், அதிபர் ஆலோசகர் மன்றத்தின் உறுப்பினருமான லிம் சீ ஓன்னுக்கு (Lim Chee Onn) Order of Nila Utama விருது வழங்கப்பட்டது.