சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி ஓட்டுனருக்கு சிறை – வாகனம் ஓட்ட 10 ஆண்டு தடை

Photo: Getty

சிங்கப்பூரில் 27 வயதான இந்திய வம்சாவளி சிங்கப்பூர் ஆடவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் ஆம்புலன்ஸ் ஓட்டி தனது பயணியை காயப்படுத்தி விபத்து ஏற்படுத்தியதற்காக இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிரடி சோதனை நடவடிக்கை: S$343,000 பெறுமதியான 8 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்

ஜி மோகனவரூமன் கோபால் ஐய்யப்பன் என்ற அந்த ஆடவருக்கு ஒவ்வொரு 100 மில்லி இரத்தத்திலும் 183 மில்லிகிராம் எத்தனால் போதை அளவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

COVID-19 தொற்றுநோய் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட சிறிது காலம், அதாவது 2020 ஆம் ஆண்டில் தனது முதலாளிக்குச் சொந்தமான ஒரு தனியார் ஆம்புலன்ஸை அவர் ஓட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மோகனவரூமனுக்கு S$4,000 அபராதமும் விதிக்கப்பட்டது, மேலும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் 10 ஆண்டுகளுக்கு அனைத்து வகுப்பு வாகனங்களையும் ஓட்டுவதற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இனி சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து செல்ல முடியாது – விசா அனுமதியை நீக்கிய நாடு