சிங்கப்பூர் சிறைச்சாலையில் என்னென்ன வசதிகள் உள்ளன? -கைதிகளுக்கான வசதி குறித்து விளக்கமளித்த அமைச்சர் சண்முகம்

சிங்கப்பூர் சிறைச்சாலையில் கைதிகள் வைக்கோல் பாய்களில் தூங்குகின்றனர் என்ற கருத்துகள் வெளிவருகின்றன.இதற்கு ,சிங்கப்பூர் சிறைச்சாலையின் வசதிகள் மதிப்பிடப்பட்டு ,கைதிகளை தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் உள்ளன உள்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.நேற்று மறுவாழ்வு,சிறைச்சாலை வசதிகள் தொடர்பான அறிக்கையை அமைச்சர் சண்முகம் வெளியிட்டார்.

சிங்கப்பூர் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மேலும் அவர்கள் அதிக நேரம் சிறை அறைக்குள் அதிக நேரம் வைக்கப் படுகின்றனர்.

இது போன்ற குறைபாடுகள் பொதுவான கேள்விகளாக எழுப்பப்பட்டன.சிங்கப்பூரில் சிறைச்சாலையின் விதிமுறைகள் மிகக்கடுமையானவை.சிறை அதிகாரிகளுக்கு அங்கு நிகழ்பவை பற்றி நன்கு தெரியும்.சிறையானது முழுப் பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கிறது.

“எங்கள் மதிப்பீடின்படி ,சிறைச்சாலை வசதிகள் எற்றுக்கொள்ளதக்கதாகவும்,சிறைக் கைதிகளின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் சிங்கப்பூர் சிறைச்சாலைகளில் 70 விழுக்காட்டிற்கு மட்டுமே கைதிகள் நிரம்பியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

சிறை வசதிகள் குறித்து விளக்கமளித்த அமைச்சர் சண்முகம், எல்லா அறைகளிலும் கழிவறை வசதிகள் இருப்பதாகக் கூறினார்.மின்விசிறி வசதிகள் இல்லையென்றாலும் இயற்கையான காற்றோட்டம் உள்ளது என்றார்.

பாதுகாப்புப் பிரச்சனைகள் காரணமாக மின்விசிறிகள் பொருத்தப்படவில்லை.மின்விசிறியின் பாகங்களை கழட்டி ஆயுதமாகவோ அல்லது மின்விசிறியில் தூக்குப் போட்டோ கைதிகள் அவர்களது உயிரை மாய்த்துக்கொள்ள வாய்ப்புகள் இருப்பதால் பொருத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.

சிறைச்சாலையில் கைதிகளுக்கு மூன்று வேலை உணவு,வைக்கோல் பாய்களுடன் இரண்டு போர்வைகள் தூங்குவதற்கு வழங்கப்படுகின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.