விடுதியில் தகராறு: இறந்த தன் தாயை அவமானப்படுத்திய வெளிநாட்டு ஊழியரை குழவி கல்லால் தாக்கிய சக ஊழியருக்கு சிறை

இந்திய ஊழியர்கள் உட்பட மூன்று வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்: உயிர்போக காரணமாக இருந்த 3 பேருக்கு சிறை
(Photo: TODAY)

மறைந்த தன் தாயை அவமானப்படுத்தியதில் அதிருப்தி அடைந்த ஊழியர் ஒருவர், மற்றொரு ஊழியரை குழவி கல்லால் தாக்கியுள்ளார்.

இந்த குற்றத்திற்காக 34 வயதான வங்காளதேசத்தைச் சேர்ந்த, மோனி லால் சான் என்ற ஊழியருக்கு நேற்று (ஜனவரி 11) இரண்டு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் பயணிகளுக்கான சோதனை முறை கடுமை: VTL விமான பயணிகளுக்கும் கடும் சோதனை

இதில் 25 வயதான திரு அகமது ரப்பி என்ற ஊழியருக்கு தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய குற்றத்தை மோனி லால் ஒப்புக்கொண்டார்.

இருவரும் ஒரே கட்டுமான நிறுவனத்தில் சக ஊழியர்களாக பணிபுரிகின்றனர், அதே போல ஒரே தங்கும் விடுதியில் வசிக்கும் இருவருக்குமிடையே கடந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி சலவை விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அறை ஊழியர்கள் அனைவரின் துணிகளுக்கு பதிலாக, ரப்பி அவரின் ஆடைகளை மட்டுமே அதிகமாக வாஷிங் மெஷினில் வைத்தது லால் சான்க்கு பிடிக்கவில்லை.

அவர்களது வாதத்தின் போது, ​​லால் சான் திரு ரபியிடம் கூறியதாவது, அதிகமான துணி துவைப்பது செலவுகளைக் குறைக்க உதவும் என்றார், ஆனால் திரு ரபி பதிலுக்கு அவரின் தாயை அவமதித்தார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக இருவருக்கும் சலலப்பு இருந்து வந்த நிலையில், லால் சான் 500 கிராம் எடையுள்ள குழவி கல்லை வைத்து வேண்டுமென்றே ரப்பியின் இடது நெற்றியில் ஒரு முறை அடித்தார், அதைத் தொடர்ந்து முதுகில் இரண்டு அடிகள் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால், திரு ரப்பியின் நெற்றியில் இரத்தம் வழிந்தோடியது, இறுதியில் அவர் சிகிச்சைக்காக Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த டிச.2ம் தேதி அதிகாலை 1 மணியளவில் லால் சான் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தேடப்பட்டு வந்த தமிழக ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து வந்தவரை வளைத்து பிடித்த போலீசார்