இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரின் ட்விட்டர் பதிவு! – சிங்கப்பூர் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தெரிவித்தது என்ன?

jaishankar vivian national day tweet
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.எஸ்.ஜெய்சங்கர் ,சிங்கப்பூர் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் 57வது தேசிய தின வாழ்த்துகளை ட்விட்டர் வாயிலாக தெரிவித்தார்.FM @VivianBala அவர்களுக்கும் சிங்கப்பூர் அரசுக்கும் மக்களுக்கும் அவர்களின் 57வது தேசிய தினத்தில் அன்பான வாழ்த்துக்கள். எங்களின் மூலோபாய கூட்டு புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து உயர்ந்த இலக்குகளை நிர்ணயம் செய்கிறது என்றும் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் ஜெய்ஷங்கர் இருவரும் கடந்த சனிக்கிழமை கம்போடியாவில் சந்தித்துப் பேசினர்.அப்போது அமைச்சர் விவியன் இந்தியாவின் டிஜிட்டல் அடையாளம் மற்றும் பணம் செலுத்தும் முறைகள் குறித்து பாராட்டினார்.இந்தியாவிலுள்ள டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கு ஒரு தெளிவான வாய்ப்பாகும் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் – இந்தியா இடையிலான மனித இணைப்புகள் மிகவும் துடிப்பானவை.உலகளாவிய சர்வதேசப் பிரச்சினைகளில் பெரும் ஒருங்கிணைப்பு உள்ளது மற்றும் இரு நாடுகளும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு, G20, காமன்வெல்த், IORA (இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கம்) மற்றும் IONS (இந்தியப் பெருங்கடல் கடற்படை சிம்போசியம்) உட்பட பல அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன.

இந்தியாவின் வர்த்தகத்தில் சிங்கப்பூர் 3.2 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.இந்தியாவின் 6வது பெரிய வர்த்தகப் பங்காளியாக சிங்கப்பூர் திகழ்கிறது.பெருந்தொற்றின் போது இந்தியாவிற்கு ஆக்ஸிஜன்-டாங்கிகள், சிலிண்டர்கள், கான்சென்ட்ரேட்டர்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற அவசரகால நிவாரணப் பொருட்களை சிங்கப்பூர் வழங்கியது.சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையேயான வலுவான உறவு வேரூன்றிய வரலாற்றைக் கொண்டுள்ளன.