எல்லாருக்கும் சோதனை செய்ய வேண்டும், சுகாதார அமைச்சகம் அறிவிப்பு – அப்படி என்ன நோய் வந்துள்ளது ?

Jalan Bukit Merah

Blk 2 Jalan Bukit Merah இல் வசிக்கும் குடியிருப்புவாசிகள்  மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் காசநோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்துள்ளது. ஏற்கனவே 170 பேருக்கு உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கை. இது சமந்தமான CONTACT TRACING எனப்படும் யாருடனெல்லாம் இருந்தோம், சந்தித்தோம் என்ற விசாரணையும் நடந்துவருகிறது.

சோதனை செய்தவர்களுக்கு காசநோய் பாதிப்பு உள்ளதா அல்லது காசநோயே  இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க கூடுதல் சோதனைகள் தேவை என்று சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

காசநோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும்  அதே நேரத்தில் லேசான காசநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவில் கவனிக்கபடுவார்கள் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

MOH தனது காசநோய் சோதனைகளை ஜூன் 25, 2022 வரை நீட்டிப்பதாக ஒரு செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது. சோதனைகள் காசின்றி இலவசமாக நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. காசநோய்க்கான சோதனை மேற்கொள்ளாமல் அந்தத் பகுதியில் வசிக்கும் அல்லது பணிபுரியும் அனைத்து நபர்களும் சோதனை மேற்கொள்ளவேண்டும் என்று MOH கூறியுள்ளது. தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் சோதனை செய்வது கட்டாயமாகும் என்றும் MOH கூறியுள்ளது.

Blk 2 Jalan Bukit Merah இல் மொத்தமுள்ள 749 குடியிருப்பாளர்களில் இதுவரை 574 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

காசநோயின் அறிகுறிகள்:

  • மூன்று வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் தொடர்ச்சியான இருமல்
  • காய்ச்சல்
  • இரவில் வியர்த்தல்
  • சோர்வு
  • எடை இழப்பு
  • நெஞ்சில் வலி

மேலும் காசநோய், தொற்றுள்ள ஒரு நபருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் பரவுகிறது.